Pages

Monday 13 March 2017

இராமநாதபுரம் இராமலிங்க விலாசம் அரண்மனையை பார்வையிட்ட ஆறாம் வகுப்பு மாணவியர்



 
திருப்புல்லாணி சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியின் தொன்மைப் பாதுகாப்பு மன்றம் மூலம் ஆறாம் வகுப்பு பயிலும் 9 மாணவியர் இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனையைக் காண 08.02.2017 அன்று அழைத்துச் செல்லப்பட்டனர்.



அரண்மனையில் வரையப்பட்டிருந்த அழகான ஓவியங்களை மாணவிகள் பார்வையிட்டனர். அரண்மனை ஒரு கோயிலைப் போன்று அமைக்கப்பட்டுள்ளதையும், மன்னர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட வாள்கள், ஈட்டிகள், வளரிகள் போன்றவை பற்றியும் அரண்மனைக் காப்பாட்சியர் திரு. ஆசைத்தம்பி மாணவிகளுக்கு விளக்கிக் கூறினார்.
      அருங்காட்சியகத்தில் உள்ள அழகன்குளம் அகழ்வாய்வில் கிடைத்த பொருள்கள், முதுமக்கள் தாழி போன்றவற்றை மாணவிகள் பார்த்தனர். 


      அரண்மனை பற்றிய கையேடுகளை தொல்லியல் துறையினர் மாணவிகளுக்கு இலவசமாக வழங்கினர்.
      நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளித் தலைமையாசிரியர் திருமதி மு.பிரேமா அவர்களின் ஆலோசனையின்படி மன்றப் பொறுப்பாசிரியர் இராஜகுரு செய்திருந்தார்.


4 comments:

  1. நாங்களும் உடன் வந்ததுபோல இருந்தது. நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து எங்களை ஊக்கமூட்டும் விதத்தில் அனைத்து பதிவுகளையும் பாராட்டி கருத்துக்களை பதிவிடும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

      Delete
    2. தொடர்ந்து எங்களை ஊக்கமூட்டும் விதத்தில் அனைத்து பதிவுகளையும் பாராட்டி கருத்துக்களை பதிவிடும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

      Delete
    3. தொடர்ந்து எங்களை ஊக்கமூட்டும் விதத்தில் அனைத்து பதிவுகளையும் பாராட்டி கருத்துக்களை பதிவிடும் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி

      Delete