Pages

Saturday 25 November 2017

அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை உருவாக்கி செயல்படுத்த மாண்புமிகு தொல்லியல் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் ஆர்வம் - வே.இராஜகுரு


அமைச்சர் அவர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கும் தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தினர்

உலக பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு, இராமநாதபுரம் இராமலிங்கவிலாசம் அரண்மனை அகழ்வைப்பகம், இராமநாதபுரம் அரசு அருங்காட்சியகம், இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனம் ஆகியவை இணைந்து, ஆர்.கே.சாமி கல்வியியல் கல்லூரி மாணவ மாணவியருக்கு தொல்பொருட்கள் பராமரித்துப்  பாதுகாத்தல் பயிற்சி மற்றும் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி ஆகியவற்றை  நடத்தின. 25.11.2017 அன்று அதன் நிறைவு  விழாவில் தமிழ் ஆட்சிமொழி, பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன் மாணவ மாணவியருக்குச் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கி பேசும்போது,
சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் மொத்தம் உள்ள 24 ஆயிரம் அரும்பொருட்களில் 11 ஆயிரம் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதைவிட அதிகமான பொருட்கள் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டின் தொன்மை வளம் மற்றும் பாரம்பரியச் சிறப்புக்கு இது சிறந்த ஆதாரமாக உள்ளது.
மாணவர்கள் எழுதிய "தேடித்திரிவோம் வா" எனும் நூலின் அச்சுப் பிரதியை அமைச்சரிடம் வழங்குகிறோம் 

இதுவரை தமிழ்நாட்டில் 80 இடங்களில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் தமிழக அரசு தொல்லியல் துறை மூலம் 39 இடங்களில் அகழாய்வு செய்யப்பட்டுள்ளது.  ஐரோப்பாவில் நாடோடிகளாக திரிந்த காலத்திலேயே நாம் மிகத் தொன்மையான பாரம்பரியச் சிறப்புடன் வாழ்ந்து வந்துள்ளோம் என்பதை  இவ்அகழாய்வுகள் நிரூபித்துள்ளன.இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழுக்கு இலக்கணம் உள்ளது. அப்படியானால் அதற்கு முன்பே தோன்றிய அதன் இலக்கியம் எவ்வளவு பழமையானது என்பதை  உணர்ந்தால் தமிழின் தொன்மையை அறியலாம்.

தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை வெற்றிகரமாக செயல்படுத்த சில செயல்திட்டங்களையும் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வழங்கினோம்.

 இவ்வளவு சிறப்பு வாய்ந்த நமது தமிழகத்தின் வரலாறு, கலை, பண்பாடு, தொல்லியல் போன்றவற்றை மாணவர்கள் தெரிந்து கொண்டால் தான்  அவற்றைப் பாதுகாக்கமுடியும். கீழடி போன்ற தமிழர் தொல் வாழ்விடங்களை அடையாளம் கட்டியவர்கள் மாணவர்களும் ஆசிரியர்களும் தான் என்பதைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.
எனவே அனைத்து  பள்ளி, கல்லூரிகளிலும் தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை உருவாக்கி செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அறிவியல் ஆய்வுக் கூடங்கள் போல் வரலாற்று ஆய்வகங்கள் உருவாக்க திட்டமிட்டுள்ளோம்.  தமிழகத்தில் 35 அரசு அருங்காட்சியகங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் உள் கட்டமைப்பு வசதிகளை உலகத் தரத்திற்கு உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளோம்இவ்வாறு அவர் கூறினார்.
திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத்தைச் சேர்ந்த மாணவர்கள் தாங்கள் கண்டெடுத்த ஈழக்காசுகளை மாண்புமிகு அமைச்சருக்கு நினைவுப் பரிசளித்தனர். அவர்களின் வரலாற்றுக் கண்டுபிடிப்புகள் பற்றிய பதிவுகள் கொண்ட நூல் ஒன்றை மாண்புமிகு அமைச்சரிடம் வழங்கினர். தொன்மைப் பாதுகாப்பு மன்றங்களை வெற்றிகரமாக செயல்படுத்த சில செயல்திட்டங்களையும் மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வழங்கினோம்.
முன்னதாக இராமலிங்கவிலாசம் அரண்மனை காப்பாட்சியர் ஆசைத்தம்பி வரவேற்றார், நிகழ்ச்சியில் ராமநாதபுரம் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவகுமார், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, செயலாளர் ஞானகாளிமுத்து மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இராமலிங்கவிலாசம் இளநிலை பொறியாளர் பிரபா நன்றி கூறினார். உலக பாரம்பரிய வாரவிழாவை முன்னிட்டு, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு புத்தகக் கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டு புத்தகங்கள் வாங்கினார்.
இராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர், செயலர் மற்றும் மாணவிகள்

ஓவியப்போட்டியில் எங்கள் பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி கோகிலா மற்றும் ஒன்பதாம் வகுப்பு மாணவி புவநிஷா ஆகியோர் முதல் பரிசு பெற்றனர். இரண்டாம் பரிசு ஒன்பதாம் வகுப்பு மாணவன் முனீஸ்வரன் மூன்றாம் பரிசு ஆறாம் வகுப்பு அபிராமி ஆகியோர் பெற்றனர். பரிசு பெற்ற மாணவியரை அனைவரும் பாராட்டினர்.
ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற கோகிலா
ஓவியப்போட்டியில் முதல் பரிசு பெற்ற புவநிஷா
ஓவியப்போட்டியில் இரண்டாம்  பரிசு பெற்ற முனீஸ்வரன்

ஓவியப்போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற அபிராமி


நாளிதழ் செய்தி








No comments:

Post a Comment